குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரை

குறித்த அறிவிப்பின் பிரதி சாக்கிய புத்திர தர்ம அமைப்பின் பிரதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை | Evidence Of A Hindu Temple On Kurundurmalai

அறிவிப்பின்படி, முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையின் மறுசீரமைப்பு என்ற போர்வையில், ஐயனார் கோவிலை தொல்பொருள் மரபுரிமை சிதைவடையும் வகையில் புனரமைப்பது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட, உங்களது இல. MBRCA/07/வேறு மற்றும் 2026.03.20ஆம் திகதியிட்ட கடிதத்துடன் தொடர்புடையது.

அதற்கமைய, எனது இதே இலக்கத்தைக் கொண்ட மற்றும் 2026.03.30 ஆம் திகதியிடப்பட்டு முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம், மேற்குறிப்பிட்ட குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் எனவும், அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம்

மேலும், 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம், தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை | Evidence Of A Hindu Temple On Kurundurmalai

அதேபோன்று, அத்தகையதொரு பௌத்த மதத் தலத்துக்குள் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதன் மூலம், ஏதேனும் ஒரு தரப்பினரால் புனிதமாகவும் கௌரவத்துடனும் மதிக்கப்படும் ஒரு குழுவினரை தூண்டும் வகையில் செயல்படுவது, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் இவ்விடத்தில் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதற்கோ அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கோ அனுமதி வழங்க முடியாது என்பது அறிவிக்கப்பட்டுள்ளதை தயவுடன் அறியத்தருகின்றேன்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தின் பிரதியொன்றை உங்களது மேலதிக புரிதலுக்காக இத்துடன் இணைத்துள்ளேன் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன் என்றுள்ளது.