சிங்கிள் சார்ஜில் 212 கி.மீ. மைலேஜ், வாய்ஸ் அசிஸ்ட்... கார்களை மிஞ்சும் அம்சங்களுடன் டி.வி.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

சிங்கிள் சார்ஜில் 212 கி.மீ. மைலேஜ், வாய்ஸ் அசிஸ்ட்... கார்களை மிஞ்சும் அம்சங்களுடன் டி.வி.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

உயர்ந்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில், குறைந்த இயக்கச் செலவைக் கொண்ட டி.வி.எஸ் ஐக்யூப் எஸ்.டி தினசரிப் பயணங்களுக்குச் சிறந்த பொருளாதாரத் தேர்வாக அமைகிறது.

5 நாட்களில் பெட்ரோல் விலை 2 முறை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் மோடி பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால், எரிபொருள் விலை உயர்வுக்குத் தப்பிக்க எலக்ட்ரிக் வாகனங்களே (EV) சிறந்த வழி என்று மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தரம், அதிக மைலேஜை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எஸ்.டி (iQube ST) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது.

டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் ஐக்யூப், ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்.டி என 3 வகைகள் உள்ளன. இவற்றின் வடிவமைப்பு, எஞ்சின் வேகம் (4.4 kW அதிகபட்ச சக்தி) கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும், பேட்டரி திறன் மற்றும் மைலேஜில் மாறுபடுகின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் பேசிக் மாடலில் 3 விதமான பேட்டரி தேர்வுகள் உள்ளன.

2.2 kWh பேட்டரி: 94 கி.மீ பயண வரம்பு (Range). 0-80% சார்ஜ் ஆக 2 மணி 45 நிமிடங்கள் ஆகும்.

3.1 kWh பேட்டரி: 123 கி.மீ பயண வரம்பு. 0-80% சார்ஜ் ஆக 4 மணி 3 நிமிடங்கள் ஆகும்.

3.5 kWh பேட்டரி: 145 கி.மீ பயண வரம்பு. 0-80% சார்ஜ் ஆக 4 மணி 40 நிமிடங்கள் ஆகும்.

4.7 kWh பேட்டரி கொண்ட மாடல் 175 கி.மீ பயண வரம்பை வழங்குகிறது. இதில் 7-இன்ச் டிஸ்ப்ளே, வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.1.49 லட்சம் ஆகும்.

டாப்-எண்ட் iQube ST மாடல்: இந்த வரிசையின் முதன்மையான மாடலான இதில் பெரிய 5.3 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில் 212 கி.மீ (IDC Range) வரை பயணிக்கலாம் என நிறுவனம் கூறுகிறது. தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 82 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. 0-80% சார்ஜ் ஆக 4 மணி 18 நிமிடங்கள் ஆகும். போர்ட்டபிள் சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 50 நிமிடங்கள் எடுக்கும் (இரவு நேர சார்ஜிங்கிற்கு ஏற்றது).

டி.வி.எஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்களில் எல்இடி லைட், ஈகோ மற்றும் பவர் மோடுகள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஜியோஃபென்சிங், விபத்து மற்றும் திருட்டுத் தடுப்பு எச்சரிக்கை, மற்றும் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் சேமிப்பு இடம் (Storage) ஆகியவை உள்ளன. முக்கியமாக, ஐக்யூப் எஸ்.டி மாடலில் 7-இன்ச் டச் ஸ்கிரீன், வாய்ஸ் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் மேம்பட்ட நேவிகேஷன் போன்ற பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரு போன்ற நகரங்களில் டி.வி.எஸ் ஐக்யூப் எஸ்.டி மாடலின் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.79 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகள் அதிகரித்து வரும் வேளையில், குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வழங்கும் டிவிஎஸ் ஐக்யூப் எஸ்.டி, பெட்ரோல் விலையேற்றத்திற்கு எதிரான சிறந்த பொருளாதாரத் தேர்வாகப் பார்க்கப்படுகிறது.