முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதிகளில் 5552 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகளை த.வெ.க. பொதுச்செயலாளரும் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
த.வெ.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதை தொடர்ந்து சென்னை தெற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு தலைமையில் ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதிகளில் உள்ள 5552 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. குக்கர், தையல் எந்திரம், கல்வி உதவித் தொகை, பிரியாணி மற்றும் அன்னதானம் என ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.
நலத்திட்ட உதவிகளை த.வெ.க. பொதுச்செயலாளரும் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
வருகிற 22-ந்தேதி முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதிகளில் இப்போதே விழா களைகட்ட தொடங்கி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு மற்றும் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.