
மட்டு ஓட்டமாவடியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த சிறுமி..!
ஓட்டமாவடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை பலத்த காயம் அடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் (8) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் இருந்து வந்த பேருந்து ஒன்றில் தந்தையும் மகளும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மோதியதனாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த தந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாத்திமா றியா என்பதுடன் காயமடையந்த தந்தை காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய அப்துல் கபூர் முகம்மட் கலீ என்பவர் என தெரியவந்துள்ளது.
அதேவேளை பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பில் ஓட்டமாவடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.