வலைபாயுதே

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..

வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இர..

வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இருந்து வந்த..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..

லைப்ஸ்டைல்

வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு..

தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. அதுவும் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தலைமுடி உதிர்ந்து, தலையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழுக்கை விழத் தொடங்கினால், அது அந்நபருக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கிவிடும். இப்படி முடி அதிகம் கொட்டி தலை வழுக்கையாவதற்கு மரபணு காரணிகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருந்தாலும், பலர் இப்பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயலுகின்றனர். அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நம்பகமான மற்றும் நீண்ட காலமாக வழுக்கை தலை பிரச்சனைக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் கடுகு எண்ணெய். இந்த கடுகு எண்ணெயானது வெப்பமூட்டும் தன்மையுடன், அதிக சத்துக்களைக் கொண்டது. இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் புதிய முடி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க உதவுகிறது.