தடைகளை தகர்த்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! விண்ணதிர்ந்த பக்தி கோஷங்கள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவ.24-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக போலீஸார் விலகிக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை, மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து, பக்தி கோஷங்கள் எழுப்பினர்.