மும்பை நிகழ்ச்சியில் மின்னும் சச்சின் மகள் நடிகை சாரா டெண்டுல்கர்..
சச்சின் டெண்டுல்கர் மகளான சாரா டெண்டுல்கர் இந்தியளவில் திரும்பிப் பார்க்கக்கூடிய பிரபலமாக திகழ்ந்து வருகிறார். எங்கு சென்றாலும் தன்னுடைய அழகான லுக்காக ரசிகர்களை ஈர்க்கும் சாரா, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சாரா டெண்டுல்கர்
இந்திய கிரிக்க்ட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி டெண்டுல்கர் தம்பதியினருக்கு அர்ஜுன், சாரா என்ற இரு குழந்தைகளை பெற்று வளர்த்தனர். தற்போது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரராக திகழ்ந்து வருகிறார். மகள் சாரா டெண்டுல்கர் Nutritionist படிப்பை முடித்துவிட்டு பல தொழில்களை செய்து வருகிறார்.
கடந்த மார்ச் 2026 ஆம் தேதி பிரபல மும்பை தொழிலதிபரின் பேத்தி சானியா சந்தோக் என்பவரை காதலித்து பிரமாண்டமுறையில் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சாரா டெண்டுல்கர் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மாடலாக திகழ்ந்து வரும் சாரா, wellness and fitness business centered around Pilates Academy X என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ஆஸ்திரேலியாவின் விளம்பர தூதுவராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட விளையாட்டு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோவையும் திறந்து வைத்தார்.
Vogue forces of Fashion Event
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாரா டெண்டுல்கர், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருப்புநிற ஆடையணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாரா டெண்டுல்கர். மேலும், Vogue forces of Fashion Event நிகழ்ச்சிக்கும் சென்று அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் சாரா.