Breaking News
Home / latest-update / நல்லூர் கந்தன் வீதிக்கு நேர்ந்த பரிதாபம்…யாழ் மாநகர சபை அதிகாரிகளின் பாராமுகம்..பெரும்அதிருப்தியில் பொதுமக்கள்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நல்லூர் கந்தன் வீதிக்கு நேர்ந்த பரிதாபம்…யாழ் மாநகர சபை அதிகாரிகளின் பாராமுகம்..பெரும்அதிருப்தியில் பொதுமக்கள்…!

சரித்திரப் பிரசித்தி நல்லைக் கந்தனின் வடக்கு வீதியில் துர்க்கா மணி மண்டபத்திற்கு நேரெதிராக கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியே இது.அதிகாரிகளின் அலட்சியப் போக்குகளினால் காலம், காலமாக மழை காலங்களில் இப்படிக் காட்சி தருகின்றது.

தவிரவும், தினமும் இந்த வீதியை தினமும் பயன்படுத்தும் ஏறத்தாழ 33 குடும்பங்கள் இந்த வீதியில் செல்லும் போது சேற்று நீரில் நினைந்து பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வருகிறார்கள். சிறிய மழைக்கு கூட, இவ்வீதியில் நீர் தேங்கி நிற்பதனால் இதனூடகப் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு உயர் அரச அலுவலர்கள் வரை தினமும் பயன்படுத்தும் இந்த சிறிய வீதிக்கு நல்லூர் கந்தனின் கருணை கிட்டவில்லை என்பதற்கு இங்குள்ள படங்களே சாட்சி. யாழ் மாநகரசபையின் தலைமை அலுவலகம் மிக அருகில் இருந்தும் உரிய இடங்களில் பொதுமக்கள் முறைப்பாடு செய்தும் இதுவரை குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் அரைகுறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இப்பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .உரிய இடங்களில் முறையிடப்பட்டதன் பின்பு யாழ் மாநகர சபையினால் கடந்த மாதம் அவசர கதியில் அரைகுறையாக கிறவல் மண் கொண்டு இவ்வீதி புனரமைக்கப்பட்டது. எனினும் குறித்த புனரமைப்பின் பின்னர் பெய்த கனமழையினால் முன்பிருந்த நிலையை விட அதிக சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால், இவ்வீதியை தினமும் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இவ் வீதிக்கு மிக அருகில் உள்ள சரித்திரப் பிரசித்த பெற்ற நல்லைக் கந்தன் ஆலய நிர்வாகியின் அழுத்தத்தினாலும், யாழ் மாநகர சபையின் அலட்சியப் போக்கினாலும் இந்த வீதியின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.வீதியின் கிழக்குப் புறத்தில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு தினமும் வந்து போகும் வாகனங்களும் இந்த சிறிய வீதியையே பயன்படுத்துவதனால், மழை காலங்களில் இந்த வீதியை அண்டிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். 

எவ்வாறிருந்த போதிலும், இனியும் காலம் தாழ்த்தாமல், உரிய முறையில் தார் இட்டு இவ்வீதியை  செப்பனிட்டு பொதுமக்களின் பாவனைக்கு ஏற்றவாறு வழங்க வேண்டியது யாழ். மாநகர சபையின் பொறுப்பாகும். அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …