இன்றைய ராசி பலன் 27 செப்டம்பர் 2026
மேஷ ராசி பலன்
![]()
மேஷ ராசி நேயர்களே உங்களுடைய வேலையை புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இன்று உங்களுடைய பணிச்சுமை அதிகமாக தோன்றலாம். சரியான திட்டமிடமும் பணி சூழலை சீராக்க முடியும். தொழில் தொடர்பாக பழைய தொடர்புகள் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கலாம். இன்று உங்களுடைய தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக பட்ஜெட் போடவும். காதல் உறவில் உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். காதல் மற்றும் திருமணம் தொடர்பாக சிறிய விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்கும்.
ரிஷப ராசி பலன்
![]()
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று தடைபட்ட பணிகளை செய்து முடிக்க முடியும். உங்களுடைய கடின உழைப்பிற்கான பலன் கிடைக்க தொடங்கும். முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இன்று பணி சுமை நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் உயரக்கூடிய நாளாக அமையும். அதோடு சேமிப்பு, முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்கள் துணையுடன் சில முக்கிய விஷயங்களை குறித்து விவாதிப்பீர்கள். நேர்மறையான மனநிலையுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்களுடைய உணவு பழக்கத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
மிதுன ராசிபலன்
![]()
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய இனிமையான பேச்சால் சூழல் இனிமையாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க யோசனைகள் பிறக்கும். தொழில் ரீதியாக புரிய நண்பர்கள் தொடர்பு கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். அதே சமயம் இன்று திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உங்கள் பட்ஜெட்டு பாதிக்காத வகையில் செயல்படவும். காதல் வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் தோன்றி மறையும். உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும்.
கடக ராசி பலன்
![]()
கடக ராசி நண்பர்களுக்கு பணி சுமை அதிகரிக்கலாம். வேலையில் பல பொறுப்புகள் உங்களுக்கு அழுத்தத்தை தர வாய்ப்பு உண்டு. முக்கியமான பணிகளை முடிப்பதில் நேரம் அதிகம் தேவைப்படும். தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன் சோதனை ஆராயவும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடந்த கால செலவுகளை சமாளிக்க போராடுவீர்கள். இன்று உங்களுடைய வீட்டு தேவைக்காக பணம் அதிகமாக செலவாக வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு தூக்கம் இன்மை, சோர்வு போன்ற விஷயங்கள் ஏற்படலாம்.
சிம்ம ராசி பலன்
![]()
சிம்ம ராசி நண்பர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். இன்று உங்களுடைய யோசனைகள், முக்கிய கருத்துகளை வெளிப்படுத்துவீரர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடையும். உங்களுடைய நிதி நிலைமை மேம்படுவதற்கான நல்ல சூழல் இருக்கும். பிறரிடம் சிக்கி இருக்கக்கூடிய பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பாராத செலவுகள் ஏற்படு.ம் காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் துணைவியுடன் சேர்ந்து எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிப்பீர்கள். வேலையில் தொடர்ந்து மும்முரமாக இருப்பது சோர்வை ஏற்படுத்தலாம்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலையில் ஒவ்வொரு முக்கிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆவணங்கள் அல்லது முக்கியதாகவல்களை இரு முறை சரி பார்க்கவும். அவசரமாக பணி செய்வது அல்லது பண பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த பரிவர்த்தனை,கள் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. நிதிநிலை சீராக இருக்கும். அதே சமயம் சில தேவையற்ற பொருட்களை வாங்க மனம் தூண்டும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்களுடைய கருத்தை பிறரிடம் திணிப்பதை எதிர்க்கவும். பணியிடத்தில் சிறிய இடைவெளிகளை எடுத்த செயல்படுவது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய கூட்டு முயற்சி மூலம் வேலையை எளிதாக முடிக்க உதவும். பணியிடத்தில் அது ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளுடன் உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெரும் விஷயத்தில் அதில் உள்ள நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முயலும். உங்கள் நிதி நிலை சீராக இருக்கும். அதில் உறவில் எனக்குத் தன்மை மேம்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தை நடக்கும். உங்களுடைய உடல் நலம் மேம்படுத்தும் உணவுகளில் கவனம் செலுத்தவும்.
விருச்சிக ராசி பலன்
![]()
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய வேலையில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். பழைய பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களுடைய குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலை தொடர்பாக அனைத்து அம்சங்களையும் கவனமாக ஆராயவும். இன்று அதிகரிக்கும் செலவுகள் காரணமாக நிதி சார்ந்த விஷயங்களில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் உங்களுடைய உணர்ச்சிகளை கவனமாக கையாளவும். இன்று உங்களுடைய துணையுடன் வெளிப்படையாக பேசுவது பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு ஒரு புதிய திட்டத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையில் புதிய பொறுப்புகள் மற்றும் யோசனைகள் பெற வாய்ப்பு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதிநிலை வலுவடைவதற்கான புதிய வழி பிறக்கும்.
இன்றும் உங்கள் செலவு விஷயத்தில் எதிர்கால தேவைகளை மனதில் வைத்து செயல்பட வேண்டிய நாள். காதல் வாழ்க்கையில்விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தை மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். . உடல் நலனில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்க்கவும்.
மகர ராசி பலன்
![]()
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய வேலை மற்றும் குடும்ப பொறுப்புக்கள் நிறைவேற்றுவதில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது நாம். பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இன்று உயர அதிகாரிகள் இடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று உங்களுடைய நிதிநிலை வளர்ச்சி ஏற்படக்கூடியதாக இருக்கும்.
பணம் தொடர்பான விஷயங்களில் அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடவும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவும். இன்று குடும்ப உறுப்பினர் ஒருவரை பற்றி கவலை உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. சிலருக்கு கால் வலி தொடர்பான சிரமங்களை சந்திப்பார்கள்.
கும்ப ராசி பலன்
![]()
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த மன நிம்மதி கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய வேலையில் எடுக்கும் முடிவுகளால் சாதகமான முடிவுகளை பெறுவீர்கள். வணிகம் தொடர்பாக நிலுவையில் உள்ள தொகை பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய தன வரவு அதிகரிக்கும். அவற்றை சரியான விதத்தில் சேமிக்க மற்றும் முதலீடு செய்ய திட்டமிடவும். இன்று நண்பர்களை சந்திக்குவோம் அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடல் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியும்.
மீன ராசி பலன்
![]()
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலை தொடர்பாக மந்தமான நாளாக இருக்கும். இன்று உங்களுடைய நிலைமை படிப்படியாக சீரடையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவி, வேலை தொடர்பாக வெற்றி தரக்கூடியதாக இருக்கும். புதிய தொழில் தொடர்பான முடிவுகள் நல்ல பலனைத் தரும். இன்று சிலரின் ஆலோசனை ஊக்கத்தை தரக்கூடியதாக இருக்கும். பணம் தந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் மனக்கசப்பு ஏற்படும். உங்களுடைய நிதான பேச்சில் மற்றும் செயல்பாடு சூழலை சமாளிக்க உதவும். உங்களுடைய உடலுக்கு தேவையான ஓய்வு கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.