றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் எழுந்த சர்ச்சைகளும் அதன் பின்னணியில் சில உண்மைகளும் உண்டு.
திடீரென மக்கள் திரட்சியாக வந்தமையினால் பிரமாண்டமாக நடைபெற்ற அந்த உணவுத்திருவிழா சிலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த அளவை விட பல்லாயிரக் கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதனால் உணவு விநியோகத்திலும் தவிர்க்க முடியாத சில தாமதங்களும் அசௌகரியங்களும் ஏற்பட்டன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய நிலையில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு பொறுப்பேற்று றீச்சாவின் நிறுவனர் உள்ளே வந்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கோரினார்.
அன்றைய நாளில் றீச்சா வளாகத்தில் இருந்த அலங்காரங்கள் சேதமாக்கப்பட்டமை, மரங்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை அதுமாத்திரமின்றி அளவுக்கு அதிகமான உணவுகளை எடுத்து அவற்றை வீண் விரயமாக அந்தப் பகுதிகளில் சிந்தச் செய்தமை போன்ற நடவடிக்கைகளே இந்த விவகாரத்தின் மூலகாரணமாகும்.
செயற்கையான ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் வகையில், இப்படியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக என்ற கேள்வி அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் ஆதாரபூர்வமாக எழுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....