தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை

தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே குறித்த மகன் தனது தாயைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த பின்னர், மகன் அதே வீட்டில் உள்ள அருகில் இருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.