இன்றைய ராசி பலன் 29 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 29 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய லட்சியத் திட்டங்களை முன்னிறுத்தி செயல்படுவீர்கள். நிலுவையில் உள்ள திட்டங்கள், செயல்கள் முன்னேற்றம் அடையும். இன்று தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்களை மதித்து செயல்படவும். இன்று ஆற்றல் நிறைந்தவராக உணர்க. எதிலும் அவசரப்படுவது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும்.உடல் நலனையும் மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உடற்பயிற்சி, யோகா செய்ய தவறாதீர்கள். காதல் உறவில் முக்கிய விவாதங்கள் நடக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்றுஇன்று புதிதாக அல்லது திடீரென ஏதேனும் ஒரு முயற்சிகளை தொடங்குவதை விட, அது தொடர்பான ஆராய்ச்சி, தரவுகளை சரி பார்த்து செயல்பட வேண்டிய நாள். பணி சுமை குறையக்கூடிய நாள். சில விஷயங்கள் தொடர்ப மனதில் தூண்டுதல் அதிகமாக இருக்கும். உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படக்கூடிய நாள். இன்று கூட்டமான, நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அதே சமயம் உங்கள் மனதிற்கு அமைதியான மற்றும் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய நினைப்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில், வேலை தொடர்பாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் ஆலோசனைக் கூட்டம், குழு விவாதங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கான புதிய வாய்ப்புகள் திறக்கும். உங்களுடைய நம்பிக்கை குறைய யோசனை அனைவரையும் ஏற்கும். உங்கள் செயலுக்கு மனம் மற்றும் உடல் ஆற்றல் ஆதரவாக இருக்கும். உடல் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டிய நாள். தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்கள், புதிய துணை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் ரீதியாக மனதில் தெளிவு பிறக்கும். பணியிடத்தில் உங்களுடைய புதிய யோசனைகள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற உதவும். இன்று எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். அது ஒரு சிலருக்கு கழுத்து அல்லது முதுகு பகுதிகளில் வலி, தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாள். தொழில் ரீதியான கடமைகள் அதிகரிக்கும். அதனால் உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக நீண்ட கால திட்டமிடல் மற்றும் புதிய வியூகம் பயன் தரக்கூடியதாக இருக்கும். இன்று முக்கியமான ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள். வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளில் சிறிய தவறுகள் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். காதல் விஷயத்தில் உங்களுடைய தைரியமான உரையாடல், அரவணைப்பு நம்பிக்கை பெறக்கூடியதாக இருக்கும். இன்று உடலில் வெப்பம், அமிலத்தன்மை அதிகரிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். உடலை சமநிலையில் வைத்திருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நிதானமாக, விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுடைய வேலை, குடும்பப் பொறுப்பு, உணவு விஷயத்தில் கவனம் தேவை. முதலீடு மற்றும் முக்கிய முடிவுகள் இருப்பதை தவிர்க்கவும். இன்று நாளும் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வேலைகளை முடிக்க தாமதம், கடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் வேலைப்பளு காரணமாக சில உடல் நல தொந்தரவுகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காதல் விஷயத்தில் உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான சூழல் மற்றும் பேச்சுவார்த்தை கட்டுக்குள் இருக்கும். இன்று தெளிவான சிந்தனை மற்றும் செயல்படுங்கள் வேலைகளை வேகமாக முடிக்க உதவும். மனித கூட்டம், விற்பனை தொடர்பாக ஒப்பந்தங்கள் என ஒரு தெளிவான திட்டம் மற்றும் அணுகுமுறை உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். இன்று கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக எதிலும் சமரசம் செய்ய வேண்டாம். காதல் விஷயத்தில் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சு, செயலில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அதிகப்படியான மற்றும் சிரமமான பணிகளை முடிப்பதன் மூலம் மனநிறைவு அடைவீர்கள். வழக்கமான பணிகள் மற்றும் போட்டி நிறைந்த பணிகளை முடிக்க திட்டமிடலும் தேவைப்படும். இன்று உங்களுடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும். செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம். அதனால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. கடினமான பணி சூழலுக்கு இடையே உங்களுடைய உடல் நலம் மற்றும் உறவுகளை பேண வேண்டிய நாளாக இருக்கும். காதல் விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலைத்திறன் வெளிப்படக்கூடிய நாள். இன்று ஊடகத்துறை, கணக்கியல், நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். உங்களுடைய வேலை தொடர்பாக தேவையான ஆவணங்களை பராமரிப்பதும், படிப்பு, விளையாட்டு போன்ற விஷயங்களில் சரியான பயிற்சி உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவும். காதலில் விஷயத்தில் அவசரம் மற்றும் அதிகமாக பேசுவதை விட, நிதானமாக பேச்சை கேட்பது நல்லது. உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும். இன்று புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் தொழில் தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய உற்பத்தி திறன் அதிகரிக்கும். சுற்று தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் முறை புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். இன்று வழக்கமான பணிகளை செய்ய சில தடுமாற்றம் ஏற்படலாம். சில சூழல்களால் உங்களுக்கு மன அழுத்தம், சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. காதல் அல்லது திருமண வாழ்க்கையில் துணையுடனும் நிதானமான உரையாடல், உறவில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலையில் நன்றாக செயல்படுவீர்கள். சந்தைப்படுத்துதல், தொழில் தொடர்பாக உங்களுடைய பயணங்கள் மற்றும் பேச்சு வார்த்தைகள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். நீங்கள் முன் வைக்க கூடிய யோசனைகள் சாதகமான முடிவுகளை தரும். இன்று உங்களுடைய உடல் மற்றும் மனம் சுறுசுறுப்புடன் இருக்கும். கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும். அதில் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிலும் தெளிவான பேச்சு, நிதானமான செயல்பாடு சூழலை சமாளிக்க உதவும். மேலும் காதல் விஷயத்தில் குழப்பங்கள் தீரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தன்னம்பிக்கையான பேச்சு உங்களுடைய தொழில் தொடர்பான சூழலை மேம்படுத்தும். இந்த சூழலிலும் அதிக உணர்ச்சி வசப்படாமல் நிலைப்பாட்டை விளக்குவது நல்லது. மேலும் கற்பனை எண்ணங்களை தவிர்த்து, நடைமுறை சாத்தியம் உள்ள செயல்களை மட்டும் செய்வது நல்லது. தொண்டை புண், பல் வலி தொடர்பான சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று குளிர்ந்த பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய நாள். வேலையில் சிரமங்களையும், அதனால் உடல் நலனில் அசெளகரியத்தை சந்திக்க நேரிடலாம். நீண்ட கால பாதுகாப்பை தரக்கூடிய முதலீடு, சேமிப்புகளில் ஈடுபட வேண்டும்.