தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் சத்தியராஜ் கண்டனம்

தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் சத்தியராஜ் கண்டனம்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து இந்தியாவின் நடிகர் சத்தியராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லூர் நினைவாலயப் பகுதியில் திலீபனின் நினைவாக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையை நேற்று (27.09.2026) அதிகாலை காவல்துறையினர் அகற்றிச் சென்றனர்.

ஜனநாயக முறைப்படி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்தச் செயல் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிங்களபேரினவாத அரசு

காவல்துறையினரின் இந்த அத்துமீறலைக் கண்டித்தும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளை எதிர்த்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் சத்தியராஜ் கண்டனம் | Actor Sathyaraj Condemns Removal Thileepan Statue

 

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயலை இந்தியாவின் நடிகர் சத்தியராஜ் கண்டித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, “தியாக தீபம் திலீபன் அவருடைய சிலையை எடுத்துவிட்டார்கள்.

12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அதுவும் உண்மையான உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய உயிலை தமிழ் ஈழம் வெல்ல வேண்டும் என்பதற்காக தியாகம் செய்தவர்.

அவர் மிகப்பெரிய ஒரு ஆயுதப்போராளியாக இருந்தும் கூட இந்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் கையில் எடுத்தார்.

இப்படி இருக்க தற்போது அவருடைய சிலையை அகற்றி உள்ளார்கள். இந்த சிலையை அகற்றியதற்கு முதலில் எனது வன்மையான கண்டனத்தை இலங்கையின் சிங்களபேரினவாத அரசிற்கு தெரிவித்துள்கொள்கிறேன்.

அந்த சிலையை அகற்றியதன் மூலம் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் திலீபனின் தியாகம் ஆழமாக பதியும்.

அவருடைய கனவான தமிழ் ஈழம் வென்றே தீரும். அதை நோக்கி நாம் அனைவரும் பயணப்படுவோம் என்று கூறி வெல்க திலீபனின் தியாகம் என்று கூறி விடைபெறுகிறேன்”. என சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.