திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில் அழுத்தம் கொடுத்தது யார்? - சண்முகம் கேள்வி

திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில் அழுத்தம் கொடுத்தது யார்? - சண்முகம் கேள்வி

சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி விவகாரத்தை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளது.
 

சென்னை தரமணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததற்கு காரணம் தவெக அரசு அல்ல போக்சோ நீதிமன்ற நீதிபதி தான்.

ஜெம் வீரமணி  வழக்கு நீதிபதி பத்மாவின் உத்தரவால் தான் வெளி உலகத்திற்கு தெரிந்துள்ளது.

* ஜெம் வீரமணி வழக்கை அதிமுக, திமுக, தவெக என 3 கட்சிகளுமே சரியாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

* ஜெம் வீரமணி வழக்கு தீவிரப்படுத்தப்பட்டது மற்றும் கைது நடவடிக்கைக்கு நீதிபதி பத்மா உத்தரவு தான் காரணம்.

* ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* போலீஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதால் தான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

* காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி விவகாரத்தை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளது.

* திமுக ஆட்சியில் எப்ஐஆர் பதிந்த நிலையில் விசாரணையே நடத்தாமல் ஆதாரம் தெளிவாக இல்லை என மூடி மறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்  இதனை எளிதில் கடந்து செல்வது சரியாக இருக்காது. ஸ்டாலின் பதில் சொல்வது தான் நேர்மையாக இருக்கும்.

* ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக காலத்தில் ஏதேனும் உத்தரவிடப்பட்டதா? இல்லையா? என ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஜெம் வீரமணி  விவகாரத்தில் திமுக அரசுக்கு அரசியல் அழுத்தம் தந்தது யார் என்ற பந்த பதிலும் ஸ்டாலின் அறிக்கையில் இல்லை.

* திமுக ஆட்சியில் வழக்கு மூடி மறைக்கப்பட்டது தொடர்பாக தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.