நுகேகொடை வாகன விபத்தில் மூவர் பலி! (காணொளி)

நுகேகொடை வாகன விபத்தில் மூவர் பலி! (காணொளி)

நுகேகொடை - நாவல வீதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதுடன், மற்றைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.