யாழ்ப்பாணத்தில் நவீன மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, இன்று (10) யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை, பலாலி, கீரிமலை மற்றும் பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரீட்சார்த்த மெட்ரோ பேருந்துப் பயணம் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூன் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறப் போக்குவரத்தைக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், கண்டி, காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.





