பிள்ளைகள் போதைப்பொருள் பாதையில் செல்ல பெற்றோர்களும் ஒரு காரணமா? ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

பிள்ளைகள் போதைப்பொருள் பாதையில் செல்ல பெற்றோர்களும் ஒரு காரணமா? ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் சிறுவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு 'ஐஸ்' போதைப்பொருள் தொடர்பாக ஒரே ஒரு சிறுவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 1,874 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 இளைஞர்களும், 21 வயதுக்கு மேற்பட்ட 11,737 இளைஞர்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவர்களில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பேரும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதில் பெற்றோர்களுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.