ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம்

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம்

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின்போது, அங்கு வந்த நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை உருவானது.
புனித பூமியொன்றிற்குள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது பௌத்த சாசனத்துக்குச் செய்யும் அவமரியாதை எனக் கூறி, குறித்த நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களைக் கடுமையாகச் சாடியதை தொடர்ந்தே இந்த முரண்பாட்டு நிலைமை எழுந்துள்ளது.

இதன்போது தேரர்களுக்கும் அந்த நபருக்குமிடையே காரசாரமான வார்த்தை பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாகத் தலையிட்டு குறித்த நபரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அங்கு நிலவிய பதற்ற நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.