செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம்! அனைத்து தரப்பினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவசர அழைப்பு!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டம்! அனைத்து தரப்பினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடுவதற்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாகவும், சர்வதேச நீதியை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.