யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய கட்டுப்பாடு! வெளியில் இருந்து உணவு கொண்டுவரத் தடை!

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய கட்டுப்பாடு! வெளியில் இருந்து உணவு கொண்டுவரத் தடை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கான உணவு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தற்காலிக தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கு வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவர அனுமதி வழங்கப்படமாட்டாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற முன்னாயத்தக் கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் உணவு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உணவுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மரங்களை அகற்றுதல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.