கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று(10) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

போதைப்பொருள் பாவனை

இந்தச் சோதனைகளின்போது, சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம் | Kilinochchi Case Published Medical Examination

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.