பருத்தித்துறை உணவகங்களில் சுகாதார சீர்கேடு! மூன்று உணவகங்களுக்கு ரூ.80,000 அபராதம்!

பருத்தித்துறை உணவகங்களில் சுகாதார சீர்கேடு! மூன்று உணவகங்களுக்கு ரூ.80,000 அபராதம்!

ருத்தித்துறை பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக 80,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, எலிகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், கழிவுநீரை வெளிச்சூழலில் வெளியேற்றுதல், சூடான உணவுகளை நச்சுப் பதார்த்தங்கள் கலக்கக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரங்களில் சேமித்தல் மற்றும் றெஜிபோம் பெட்டிகளில் சூடான ரொட்டிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

இதனையடுத்து, குறித்த உணவகங்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில், மூன்று உணவகங்களுக்கும் முறையே 40,000, 30,000 மற்றும் 10,000 ரூபாய் என மொத்தம் 80,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.