கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக வாக்கிங் போகணும்... ஏன் தெரியுமா?
முன்பெல்லாம் பெண்கள் அதிகளவில் உடல் உழைப்பில் ஈடுபட்டதால் பிரசவம் எளிதாக அமைந்தது. ஆனால் இன்றைக்கு உடல் உழைப்பு என்பது பெரியளவில் இல்லை. எனவே தான் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்பம் தரித்தல் என்பது அவர்களது வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய ஒரு உன்னத தருணமாகும். கருவறையில் 9 மாத காலம் குழந்தையை பாதுகாத்து வெளியுலகிற்குக் கொண்டு வருவதற்குள் பெண்கள் படும் சிரமம் ஏராளம்.
2/ 8
முன்பெல்லாம் பெண்கள் அதிகளவில் உடல் உழைப்பில் ஈடுபட்டதால் பிரசவம் எளிதாக அமைந்தது. ஆனால் இன்றைக்கு உடல் உழைப்பு என்பது பெரியளவில் இல்லை. எனவே தான் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சிகள் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்த வழியாக உள்ளது. இதோடு பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி, கணுக்கால் வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் சில பலன்கள் உள்ள நிலையில் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி ஏன் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான முக்கிய காரணங்கள்.?.
3/ 8
பிரசவ காலத்தில் பெண்களுக்கு நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் முக்கியம். இந்நிலையில் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இதய பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது.
4/ 8
கர்ப்ப காலம் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க வாக்கிங் உதவுகிறது. மேலும் உங்களது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு போன்ற எவ்வித உடல் நலப்பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது.
5/ 8
காலை மற்றும் மாலை என இருவேளை நீங்கள் வாக்கிங் செல்லும் போது நல்ல செரிமானம் ஏற்படுகிறது. இதோடு கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் பொதுவாக பிரச்னையாக உள்ள நிலையில், இதை தடுப்பதற்கும் வாக்கிங் உதவியாக உள்ளது.
6/ 8
குழந்தையை வயிற்றில் சுமக்கும் நேரங்களில் பெண்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியாகிறது. இது மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவியாக உள்ளது.
7/ 8
கர்ப்ப காலம் முழுவதும் வாக்கிங் போகும் போது சுக பிரசவம் அதாவது நார்மல் டெலிவரிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமில்லாமல் உங்களது உடல், தசைகள் அனைத்தும் பிரசவத்திற்கு தயாராகின்றது. குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
8/ 8
இதுபோன்ற பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், கர்ப்ப காலத்தில் நீங்கள் எந்த உடற்பயிற்சியையும் செய்யும் போது, அதை மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் செய்ய வேண்டும். நுரையீரல் மற்றும் இதய பிரச்னை உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.