நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!!

நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!!

நாட்டில் சுமார் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரதேச மருத்துவமனைகளில் மருந்து கொள்வனவு செய்வதற்காக மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டமொன்று நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு | 52 Shortage Of Medicinal Products In Sri Lankaஇந்த நடைமுறையினால் முறைகேடுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மருந்துப் பொருள் கொள்வனவு கிரமப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.