இலங்கையில் திடீர் மாற்றம் கண்டுள்ள தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.