எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்.. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பம்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்.. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பம்

வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு இடம்பெற்ற முதல் வர்த்தகங்களில், எண்ணெய் விலை சற்று சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த இந்த வார இறுதியில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எண்ணெய் வர்த்தகர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருவதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், அமெரிக்க எரிபொருள் விலை சடுதியாக குறைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சுமார் அரைசதவீதத்திற்கு இந்த விலைக்குறைவு பததிவாகியுள்ளது. 

வார இறுதியில் இந்த நிலை ஏற்பட்டதால் சர்வதேச எண்ணெய் வர்த்தகர்களுக்கு அமெரிக்காவின் நகர்வால் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு எதிர்வினையாற்ற முடியாமல் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்.. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பம் | Oil Futures Dip Slightly First Trades Us Venezuela

இதற்கிடையில், உலகளாவிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 22 சென்ட்ஸ் அதாவது 0.4வீதம் சரிந்து 60.53 டொலராக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாக பாதிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பாராத நிலையில் இந்த மாற்றம் சர்வதேச ரீதியில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அது ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது.மற்றும் ஒரு நாளைக்கு சுமார் 550,000 பீப்பாய்களை ஏற்றுமதி செய்கிறது என்று லிபோ ஆயில் அசோசியேட்ஸ் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் ஆண்டி லிபோ கூறுகிறார்.

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்.. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள குழப்பம் | Oil Futures Dip Slightly First Trades Us Venezuela

இது உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியில் 1 வீதத்திற்கும் குறைவானது, மேலும் வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கை எண்ணெய் உற்பத்தியை சீர்குலைத்தால் மற்ற நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகங்களால் ஈடு செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இருப்பினும், வெனிசுலாவில் மறு முதலீடு செய்வதில் தனியார் எரிசக்தி நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக முக்கிய நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இதற்கிடையில், வெனிசுலாவினை தங்கள் நிர்வாகத்தின் மூலம் ஆட்சி செய்து எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரிசெய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.