பரீட்சைக்கு அச்சமடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு

பரீட்சைக்கு அச்சமடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு

களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

களுத்துறை, துவா கோயில் வீதியை சேர்ந்த 16 வயது மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் கடந்த இரண்டாம் திகதி அவரின் வீட்டில் நடந்துள்ளது.

பிரபல பாடசாலை மாணவியான அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்கு அச்சமடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு | Exam Fear Girl Took Wrong Decision

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எதிர்கொள்ள அச்ச நிலைமை காரணமாக விபரீத முடிவை எடுப்பதாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.