பல்கலைகழக மாணவர்கள் மோதல் ; நால்வருக்கு நேர்ந்த கதி
கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதால் குறித்த மாணவர்கள் விடுதியில் படித்துக் கொண்டிருந்தபோது, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பல நாட்களாக உரத்த சத்தம் எழுப்பி, பட்டாசுகளை வெடித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, பல்கலைக்கழக உணவகத்தில் வைத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது மோதலாக மாறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதல்கள் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாகம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.