புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி

புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி

காலியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹுங்கல்ல, கட்டுவில, அஹுங்கல்ல-உரகஸ்மன்ஹந்திய வீதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அஹுங்கல்ல, பதிராஜகம பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சமத் தேஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி | Boy Dies In A Accident

குறித்த இளைஞன் மூன்று நாட்களுக்கு முன்பு தான் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் இருந்து தனது சம்பளத்தை பெற்று, மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்.

நேற்று முன்தின இரவு, தான் வாங்கிய மோட்டார் சைக்கிளில் பயிற்சி செய்ய சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.