சீரற்ற காலநிலை: குடை சாய்ந்தது சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம்!

சீரற்ற காலநிலை: குடை சாய்ந்தது சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம்!

சீரற்ற காலநிலை காரணமாக காங்கேசன்துறையில் தனியார் விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் காணப்பட்ட சாய்ந்து விழுந்துள்ளது.

யாழில் நேற்றைய தினம் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவதானிப்புகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு யாழில் நிலவிய மழையுடன் கூடிய அசாதாரண காலநிலையின் தாக்கத்தின் காரணமாக குறித்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் காங்கேசந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.