கடந்த ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்
கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஊடாக 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வெளி விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இன்று (05) காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (புலம்பெயர் தொழிலாளர்கள்) மூலம் 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் 3.2 பில்லியன் டொலர் வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 85 பில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.