யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.12.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் நேற்று தனது  நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக தாளையடி கடற்கரை சென்றுள்ளார்.

யாழ். தாளையடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் | Young Man Drowns In Jaffna Sea

கடல் பகுதியில் நிலவும் சீரற்ற காற்று  மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை காவல் நிலையத்தில் வைத்து மருதங்கேணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.