கனடாவிலிருந்து வந்தவருக்கு யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; பரிதாமாக பிரிந்த உயிர்
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசித்து வந்த 42 வயதுடையவர் அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

அந்நிலையில் , கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு நிமோனியா காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.