வாழை இலை வெட்டச்சென்ற பெண் மின்சார வேலியில் சிக்குண்டு பலி..!

வாழை இலை வெட்டச்சென்ற பெண் மின்சார வேலியில் சிக்குண்டு பலி..!

அக்கரபத்தனை - பசுமலை பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த சட்ட விரோத மின்சார வேலியில் சிக்குண்ட பெண் ஒருவர் பலியானார்.

இந்தச் சம்பவம் பசுமலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 70 வயதானவரும், நான்கு பிள்ளைகளின் தாயுமான ஒருவரே பலியானார்

பூஜைக்காக வாழை இலை வெட்டச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.