மதுபான சாலைகள்- இரவு விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்!

மதுபான சாலைகள்- இரவு விடுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம்!

ஜப்பானில் மதுபான சாலைகள் மற்றும் இரவு விடுதிகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென ஜப்பானின் பொருளாதார அமைச்சர் யசுதோஷி நிஷிமுரா (Yasutoshi Nishimura) தெரிவித்துள்ளார்.

மே மாத இறுதியில் நாடு அவசரகால நிலையை தளர்த்தியதிலிருந்து தொற்றுநோய்களின் மையதாக இது மாறியுள்ளது.

ஆகையால், வெள்ளிக்கிழமைக்கு பின்னர் அந்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என பொருளாதார அமைச்சர் கூறினார்.

தலைநகர் டோக்கியோவில் நாளொன்றுக்கான கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்று அதிகரித்த போதிலும், நாடு முழுவதும் அவசரகால நிலையை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜப்பானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

ஜப்பானில் இதுவரை 20ஆயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 981பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.