பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இன்று (27) ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.