பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்
வரலாற்றில் முதன்முறையாக,சுனாமி அலை உருவாகும் தருணத்திலிருந்து அவை கடலில் எவ்வாறு பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகக் அவதானிக்க முடிந்துள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் கடலில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சுனாமி அலையை விண்வெளியில் இருந்து நேரடியாக நாசாவால் அவதானிக்கப்பட்டுள்ளது.
120 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சுனாமி அலை, நாசாவின் SWOT (Surface Water and Ocean Topography) செயற்கைக்கோளால் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 29, 2025 அன்று ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையில் உள்ள குரில்-கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சுனாமி அலைகளை விஞ்ஞானிகளால் அவதானிக்க முடிந்தது.

'நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 70 நிமிடங்களுக்குப் பிறகு சுனாமி அலைகள் எழுந்தன.நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக கடற்பரப்பின் சில பகுதிகள் 13 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு மண்டலம் 402 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்புகள் நவம்பர் 2025 இல் சீஸ்மிக் ரெக்கார்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.