வியட்நாமில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

வியட்நாமில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

வியட்நாமில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகின்ற நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென நேற்று (புதன்கிழமை) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்.

எனினும், வியட்நாம் குடிமக்கள், தூதரக அதிகாரிகள், நிபுணர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், தேர்ச்சி பெற்ற பணியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது அனுமதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாட்நாமில் கடந்த 2 வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் மட்டும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில் வியட்நாமில் அதன் தாக்கம் குறைந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களாக இதுவரை 19 பேர் மட்டுமே கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் இதுவரை 936பேர் கொவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், நாட்டில் 32,400க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வியட்நாமில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் 1063பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 35பேர் உயிரிழந்துள்ளனர்.