சிவனொளிபாத மலை சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு நேரந்த அசம்பாவிதம்
சிவனொளிபாத மலைக்குச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் மலையிலிருந்த தவறி வீழந்துள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணி செல்பி எடுக்க சென்றபோதே 100 அடி பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார்.

ஐரோப்பிய தரச் சான்றிதழ் பெற்ற பிளையிங் ராவணா மீட்புக்குழுவினர் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
இதேவேளை சிவனொளிப்பாத மலைக்கான ஹட்டன் ஊடான பாதையை பயன்படுத்தும் யாத்திரீகர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பாதையின் ஊடான போக்குவரத்து பாதுகாப்பாக நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் உறுதியளித்துள்ளது.