கடும் சீற்றத்துடன் காணப்பட்ட முல்லைத்தீவு கடல்.. மக்கள் தெரிவிப்பு
முல்லைத்தீவில் வழமைக்கு மாறாக கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுவதனை நேற்றைய தினம் அவதானிக்க கூடியதாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு கடற்கரை வழமைக்கு மாறாக சீற்றத்துடன் கொந்தளிப்பாக இருந்துள்ளது.

இதனால் கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8,9 திகதிகளில் மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், இன்று அதிக மழை கிடைக்கப்பெறும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


