வைத்தியசாலை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

வைத்தியசாலை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பற்றுச்சீட்டு வாங்கிய ஒருவரே இவ்வாறு விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பற்றுச்சீட்டு வாங்கிய நபர் வீட்டிற்குச் செல்லாமல் வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.

வைத்தியசாலை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி | One Person Dies Falling From Third Floor Hospital

இந்த நிலையில், கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்பிட்டிய காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.