ஜப்பானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம்

ஜப்பானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம்

ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நில அதிர்வு தீவிர அளவுகோலில் 5 ஆம் நிலை கொண்ட வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

குறித்த நிலநடுக்கமானது, செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10:18 மணிக்கு பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 10 நிமிடங்களுக்குப் பிறகு, யசுகி பகுதியில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம் | Earthquake Shakes Japan Today

அது, ரிக்டர் அளவுகோலில் 5.1 என பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எந்த சுனாமி எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.