ஒன்லைன் சூதாட்டத்தால் தூண்டப்படும் காவல்துறை அதிகாரிகள்!

ஒன்லைன் சூதாட்டத்தால் தூண்டப்படும் காவல்துறை அதிகாரிகள்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் ஒன்லைன் சூதாட்டம் மூலம் அதற்கு தூண்டப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய சம்பளம் சூதாட்டத்தில் முழுமையாக மூழ்கியுள்ளதால், அவர்கள் தவறான நடத்தை மூலம் பணம் சம்பாதிக்க தூண்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை மா அதிபர், “குறித்த காவல்துறை அதிகாரிகள், தங்கள் சம்பளம் சூதாட்டத்தில் முழுமையாக மூழ்கியுள்ளதால், தவறான நடத்தை மூலம் பணம் சம்பாதிக்க தூண்டப்படுகிறார்கள். இது ஒரு சட்ட கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையாக மாறியுள்ளது.

ஒன்லைன் சூதாட்டத்தால் தூண்டப்படும் காவல்துறை அதிகாரிகள்! | Police Officers Motivated By Gambling Addiction

காவல்துறைக்கு மேலதிகமாக, முப்படைகளின் பல உறுப்பினர்களும் ஒன்லைன் சூதாட்டத்தால் தூண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அரசாங்க அதிகாரிகளும் இதே சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். இந்த சூழ்நிலையால் தற்கொலைகள், குடும்ப தகராறுகள், வீட்டு வன்முறை மற்றும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒன்லைன் சூதாட்டம் ஒரு கடுமையான சமூக பேரழிவாக மாறியுள்ளது.இந்த நிலை மிகவும் மோசமாகிவிட்டது." என தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு அதிகளவில் அடிமையாகி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்தார்.