அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி

லிபிய கடற்பரபில் தொடர்கதையாகும் துயரம்.அகதிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

லிபியா (Libya) அருகே மத்திய தரைக்கடல் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகே கவிழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த லிபிய கடலோர பாதுகாப்பு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 24 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.