
புதிய எரிவாயு திட்டத்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாற்றத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் உதவியினை பெற்றுக் கொள்வதற்காக, ஐரோப்பிய பாராளுமன்றம் சில எரிவாயு திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் பாவனையினை அகற்றுவது தொடர்பான திட்டம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய அரசாங்கங்களுக்கிடையில் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள நிலையில் குறித்த அனுமதி நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குறித்த அனுமதி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள மற்றொரு வாக்களிப்பின் மூலம் குறித்த நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.