சீனாவில் கோர விபத்து! பணியாளர்கள் பலி - மீட்புப் பணி தீவிரம்

சீனாவில் கோர விபத்து! பணியாளர்கள் பலி - மீட்புப் பணி தீவிரம்

சீனாவில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் தொன்; பெட்ரோலுடன் பயணித்த கப்பல் ஒன்று, யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் மோதியது.

இதில் எண்ணெய் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து 15 கப்பல்கள் மற்றும் 2 வானூர்திகள்; இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

விபத்தில் 14 பணியாளர்கள் காணாமல்போன நிலையில் 3 பணியாளர்கள் மட்டும் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் எண்ணெய் கப்பலில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டமையை தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடுதல் நடத்தியபோது 8 பணியாளர்களின் உடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பணியாளர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.