பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடு! பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
புயல் காரணமாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி இந்த வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த செயல்முறை தொடர்பாக தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட ரூ. 25,000 உதவித்தொகையில் 92% ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
