தீவிரமாகும் போர்; சவுதி அர Aramco தலைமையகம் மீது கொடூர ஏவுகணைத் தாக்குதல்!
நேற்று (அக்டோபர் 13) அன்று தஹ்ரானில் (Dhahran) உள்ள சவுதி அரம்கோவின் தலைமையக வளாகத்திலுள்ள நிர்வாகக் கட்டிடத்தை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அக் கட்டிடத்தின் மேல் மூன்று தளங்கள் சேதமடைந்ததோடு, சிறிய அளவிலான தீ விபத்தும் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம், தீ விபத்து ஏற்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவுக்கும் ஏமனின் ஹூதி இயக்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதனிடையே, ரியாத் நகரில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் 15 வீடுகள் சேதமடைந்தன; மேலும் இதில் நான்கு பேர் காயமடைந்ததாக சவுதி சிவில்காப்பகம் தெரிவித்துள்ளது.
ஏமனில் ஹூதி அமைப்புகளுடன் தொடர்புடைய எரிபொருள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இது பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.