அநுர அரசாங்கத்தின் அரசியல்வாதி மீது தாக்குதல் - இளைஞனின் அதிரடி செயல்

அநுர அரசாங்கத்தின் அரசியல்வாதி மீது தாக்குதல் - இளைஞனின் அதிரடி செயல்

ஆளும் தரப்புக்கு அரசியல்வாதிக்கும் பொது மகன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பழக்கடை வியாபாரியான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுர அரசாங்கத்தின் ஆட்சியின் கீழுள்ள புத்தளம் மாநகர சபையின் நகர முதல்வர் ரின்சாட் அஹமட் மற்றும் வீதியோரத்தில் பழ வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிக்கும் இளைஞனுக்கும் இடையில் முறுகல்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பகுதியில், வீதியோரத்தில் வியாபாரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து நகர முதல்வருக்கும் பழ வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான இளைஞன் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனக்கும் தனது வாகனத்துக்கும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நகர முதல்வர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இளைஞரின் உறவினர் ஒருவர் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.