கொட்டும் மழையில் திருநங்கை நமீதா செய்த தரமான செயல்: வைரலாகும் காணொளி

கொட்டும் மழையில் திருநங்கை நமீதா செய்த தரமான செயல்: வைரலாகும் காணொளி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ஒட்டுமொத்த ரசிகர்களைக் கவர்ந்த நமீதா கொட்டும் மழையில் நனைந்தபடி தெருநாய்களுக்கு உணவளிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கையாக உள்ளே சென்று மக்களின் மனதினை வென்றவர் தான் நமீதா. இவர் உள்ளே சென்ற ஒரு வாரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடந்து வந்த பாதையைக் குறித்து கூறும் போது, அவதானித்த ஒட்டுமொத்த உலகமே கண்ணீர் வடித்தது என்று கூறலாம். இந்நிலையில் தற்போது வைல்டு கார்டு எண்ட்ரிக்கு உள்ளே செல்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் மழை காரணமாக வெள்ளத்தில் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கையில், உணவின்றி தவித்த தெருநாய்களுக்கு உணவு சமைத்து கொட்டும் மழையில் சென்ற உணவளித்துள்ளார். இக்காட்சியினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.